நாவலந்தீவின் நாகரிகத்திற்கான அடையாளம் மதுரை. பெருமை பல பேசும் சங்ககால நகரம். வெள்ளியம்பலமும் பொற்றாமரையும்
புகழ் சேர்ந்த மதுரை இழந்தவையும் பெற்றவையும் ஏராளம். தொழில்நுட்ப வளர்ச்சியும் வணிகமயமாதலும் நம் மண்ணையும் மரபையும்
வனப்பையும் பாழ்படுத்திவிட்டன. மதுரையும் அதற்கு விலக்கல்ல. காலபெருவெளியில் உந்தித்தள்ளுகிற வாழ்க்கைச் சூழலில் மறைந்தவற்றையும் நாம்
மறந்தவற்றையும் கண்முன் கொணரும் முயற்சியாக இந்நூலெங்கும் மதுரையின் காலச் சுவடுகள் , சிதைவுற்ற பழமையின் சிதைவுறாத நினைவுப் பதியன்கள்.