அறிவொளி மரபின் நேரடியான தொடர்ச்சியாகவே மார்க்ஸியமும் கருதப்பட்டு,அது உலக மாந்தர்களிடையே உள்ள பண்பாட்டு வேறுபாடுகளைக் கருத்தில் கொள்ளாத,புதிய ஒடுக்குமுறைக்குள் அவர்களை கொண்டுவரிகிற ‘பெருங்கதையாடல்கள்’லொன்றே எனப் பல்வேறு பின் நவீனத்துவச் சிந்தனையாளர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது.இந்தச் சூழலில்,அஎத மரபின் தொடர்ச்சி,தொடர்ச்சியின்மை ஆகிய இரண்டையும் கொண்டுள்ள மார்க்ஸியம்,சிந்தனை உலகில் ஒரு மாபெரும் முன்னோக்கிய பாய்ச்சலை ஏற்படுத்தி,மானுட குலத்தின் விடுதலைக்கான ஒளிவிளக்காக சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இந்தச் சிறு நூல் கூறுகின்றது.