தமிழகத்தோடு அறேபியர் கொண்ட உறவை இஸ்லாத்தின் தோற்றத்திற்கு முன், பின் என இருவகைப்படுத்தலாம். அதற்கு முன் வணிக உறவே முதன்மையானதாக இருந்தது. இஸ்லாம் நுழைந்ததும் மதரீதியிலான மொழி அடையாளம் வலுப்பட்டது; அறபியைத் தமிழ் முஸ்லிம்கள் இன்முகத்தோடு வரவேற்றனர். அறபு, தமிழ் முஸ்லிம்களின் அடையாளமாக மாறியது. முஸ்லிம்களின் வழக்கில் செல்வாக்குபெற்ற அம்மொழி, தமிழோடு இணைந்து உருவாக்கிய வடிவம் ‘அறபுத்தமிழ்’.
இந்த இரு மொழிகளுக்கான உறவையும் அறபின் ஒலியைத் தமிழில் பெயர்க்கும் முறையையும் புதிய கோணங்களில் ஒப்புநோக்குகிறது இந்நூல்.