இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் நாஜிமுகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15 ஆம் வயதில் இறந்துப்போன யூதச் சிறுமி ஆனிஃபிராங்க், தனது 13, 14 ஆம் வயதில் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழ்ந்த வாழ்க்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். ஆனிஃபிராங்க் எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு- உலகையே உலுக்கிய புத்தகம். நாஜிக்கள் நடத்திய அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதிவைத்துவிட்டுப் போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல் முறையாக தமிழில் வெளிவந்துள்ளது