நீங்கள் ஒவ்வொருவரும் தினமும் ஒரு மணி நேரம் நல்ல புத்தகங்கள்படிக்க ஒதுக்குவீர்களானால் சில வருடங்களுக்குள் நீங்கள் ஓர் அறிவுக்களஞ்சியமாவீர்கள்.புத்தகம் என்றென்றும் உங்களுக்கு ஓர் உற்ற நண்பனாகத் திகழும்.உங்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் ,ஒரு நூல் நிலையம் அவசியம் இருக்க வேண்டும்.அதுமட்டுமல்ல,அனைவரும் தினமும் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.செய்வீர்களா?இந்த ஒரு சிறிய முயற்சி நாட்டில் ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முதற்படியாகும்.
அந்த முயற்ச்சிக்கு ஆக்கமும்,ஊக்கமும் கொடுக்க வேண்டியது இங்கு கூடியிருக்கும் ஆன்றோர்கள்,சான்றோர்கள்,பொதுமக்களாகிய உங்களின் முதற் பணியாக இருக்க வேண்டும் . -ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்