ஆயுத வியாபாரத்தின் அரசியல்
நாளையின் ஆயுதங்கள் எத்தனை சாதுர்யமானதாகவும், அபாயகரமானதாகவும் இருக்கப் போகின்றன தெரியுமா? ஏற்கனவே 21ஆம் நூற்றாண்டின் போர்க்களங்களில் மேலாதிக்கம் செலுத்தத் தொடங்குமளவு நீட்சிபெற்றுவிட்ட மிக சமீபத்திய , சாமர்த்தியமான, மிக அபாயகரமான தொழில்நுட்பங்கள். ஏறத்தாழ தாமாகவே இலக்குகளைத் தேடி கண்டடைந்து கொள்ளும் திறனாற்றல் பெற்றவை இவ்வாயுதங்கள்.
இதுவெல்லாம் யாருக்கு ?
’ எதிர்கால ஆயுதங்கள் ‘ எதிரிகளின் கற்பனைக்கப்பாற்பட்ட மறைவிடத்தையும், இலக்கையும் கனகச்சிதமாக அடித்துத் தூள் தூளாக்கும் திறன் கொண்டவை. போரில் எவராலும் வெல்லமுடியாதவை... என்ற அருமை பெருமைகள் வழிந்தோடிக் கொண்டிருந்தன. அப்படியானால் இவர்கள் சொல்லும் ‘எதிரி’ என்பவர் யார்? இந்த அருமை பெருமை கொண்ட ஆயுதத்தை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் என்னும்போது இவர்கள் சொல்லும் எதிரிகள் என்கிற படிமம். இந்த ஆயுதம் இல்லாதவன்தான் என்றாகிறது.