1980ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாளன்று கோர்ஷெத் மற்றும் ரூமி பாவ்நகரியின் உலகம் சுக்குநூறாக நொறுங்கியது.ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு புதிய உலகம் திறந்தது.
பாவ்நகரி தம்பதியர் தங்கள் மகன்களான விஸ்பி மற்றும் ரத்தூவை ஒரு மோசமான கார் விபத்தில் பறி கொடுத்தனர்.இந்நிலையில் தங்களால் நீண்டகாலம் உயிர் வாழ முடியாது என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்ப்பட்டது.கடவுள்மீதான நம்பிக்கையையும் அவர்கள் முற்றிலுமாக இழந்திருந்தனர்.ஆனால் திடீரென்று ஆவி உலகிலிருந்து அவர்களுக்கு வந்த ஓர் அதிசகரமான தகவல் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி,நம்புதற்குரிய ஒரு பயணத்தில் அவர்கள் அடியெடுத்து வைக்க வழி வகுத்தது.