ஆட்டிஸப் பாதிப்பு கொண்ட குழந்தைகளைப் பார்த்தால், அவர்களுக்காகப் பரிதாபப்பட்டு 'உச்’ கொட்டிவிட்டுப் போவது நம் வழக்கம். ஆனால், நீங்கள் டாக்டர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் எழுதி இருக்கும் 'ஆட்டிஸம் அறிவோம்’ புத்தகத்தைப் படித்தவராக இருந்தால், அந்தக் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி, 'நாளைக்கு என்ன சாதனை பண்ணப்போறீங்க?’ என ஆசையாய் கேட்பீர்கள். அந்த அளவுக்கு ஆட்டிஸக் குழந்தைகளின் வாழ்வியலை நமக்குப் புரியவைக்கிறது இந்தப் புத்தகம்.