ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
இரா. பாவேந்தன்
விலை ரூ.150/-
தமிழிகத்திலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களால் கொழும்பு நகரிலிருந்து வெளியிடப்பட்ட மாத இதழ் ‘ஆதிதிராவிடன்’ (1912-1921). திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் கருத்தியல்களோடு இந்த இதழ் தொடக்க காலகட்டத்தில் நல்லுறவு கொண்டிருந்தது. இவ்விதழ் வைதிகசார்பு கருத்துக்களை வெளியிட்டு வந்த போதிலும் சாதி ஒழிப்பு மனுதர்ம எதிர்ப்பு, தாழ்த்தப்பட்டோர் விடுதலை முதலிய குறிக்கோள்களில் எவ்விதக் கருத்தியல் சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. தமிழிகத்தில் நடைபெற்ற முதல் சாதிமறுப்பு மணம், மதமாற்றம் பற்றி சில புதிய தகவல்களை ஆதிதிராவிடன் பதிவு செய்துள்ளது. இத்தொகுப்பில் தாழ்த்தப்பட்டோர் அரசியல், கல்வி, சமயம், இலக்கியம், பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஆதிதிராவிடன் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மகாத்மா ஜோதிராவ் ஃபூலே இயக்கத்தைச் சார்ந்த மன்னர் சாகுமகாராசர் உரையின் தமிழ்வடிவம், ஃபூலே இயக்கத்திற்கும், தமிழகத்திற்கும் இடையேயான தொடர்பை விளக்கும் ஓர் அரிய ஆவணமாக இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.