ஆலவாயழகன்
சுமார் ஆயிரம் ஆண்டு காலம் இப்படி நலிந்து கிடந்த அந்நாட்டில் விடிவெள்ளியெனத் தோன்றினான் ஒரு வீர இளைஞன். கி.பி. 1216முதல் கி.பி. 1238 வரை பாண்டி நாட்டின் முடிமன்னனாகத் திகழ்ந்து, சோழப் பேரரசை வீழ்த்திப் பாண்டியப் பேரரசை உதயமாக்கிய அந்த மாவீர இளைஞனின் பெயர் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் என்பதாகும்.
அப்பேரரசனிடம் குடிகொண்டிருந்த அரசியல் ஞானமும், வீர உணர்ச்சியும், விவேக சிந்தையும், அறநெறிப் பண்பும், இறை பக்தியும், தமிழ்ப் பற்றும் சேர்ந்துதான் ஒரு பேரரசை வீழ்த்தி மற்றொரு பேரரசை உதயமாக்க உதவின எனலாம். அச்சரித்திர நாயகனைக் கதாநாயகனாகக் கொண்டே இந்த ‘ஆலவாயழகன்’ உதயமாகியிருக்கிறான்.