யாவும் சமீபித்திருக்கிறது :
மனவெழுச்சியை மையமாக வைத்து, சமீபித்திருக்கும் மற்றெல்லாவற்றையும் உறவு, மரணம், நிலம், கனவு, விடியல், இயக்கம், நினைவு, என எல்லாவற்றையும் சொற்களால் அளந்து பார்க்கும் வீரிய முயற்சி இக்கவிதைகள் கவிஞனின் சொற்செட்டுகள் எந்த அலங்காரமின்றி, அவசியமிளா சொற்க்களுமின்றி துல்லியமாக வந்து விலுகின்றன, அகமும் புறமும் ஒன்றையொன்று சமீபித்திருக்கும் அதிர்வையும் உணரமுடியும். தன்மைனிலையின் குரல், உரத்து இருப்பதும் அதுவே தனிமையின் அந்தகாரத்தின் முன் அகண்டு கிடக்கும் பால்வெளியைக் காட்ச்சிபடுத்துகின்றன, கவிதைகள் மனவெளுச்சியும் மனப்புறழ்வும் ஒன்றையொன்று சமீபிக்கும் தட்டாமலை சுழற்றலையும் கவனமாகச் செய்கிறார், கடங்கநேரியான்.