வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்
கட்டற்ற அன்பின் ராணியாக யாத்திரிகா இத்தொகுப்பினுள் வலம் வருகிறாள். எமிலி, ஆண்டாள் போன்ற அதீதக் காதல் பெண்ணாக காதலிடம் மன்றாடியபடி இருக்கிறார். பிரிவின் முறிந்த காதலின் கருகிய வாசனையும் வலியும் முற்பகுதிக் கவிதைகளில் நிரம்பியிருக்கிறது. பிற்பகுதிக் கவிதைகளில் சந்திரா மிக ஆவேசமாக, போரிடும் சொற்களால் தன்னை நிலைநிறுத்தி விடுகிறார். நிலைகுலையாமல் பெண்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கையேடாக மட்டுமில்லை. பொதுவெளிகளில் அக்கறை கொள்ளும் கவிதைகளும் இருக்கின்றன. தூக்குத்தண்டனைக் கைதி பேரறிவாளன் பற்றிய கவிதைகளும் சிறந்த கவிதைகளாக இருக்கின்றன. தொடர்ந்து சந்திரா கதைகளோடு கவிதைகளும் எழுத வேண்டும்.அது அவருக்கும் நல்லது தமிழுக்கும் நல்லது.
வாழ்த்துக்களுடன்...
சமயவேல்
சென்னை