வந்தேறிகள் :
பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளால் உழைக்கும் மக்கள் பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் புலம் பெயர்வது ஆண்டாண்டு காலமாய் நிலவும் ஒன்றுதான். எனினும், உலகமயமாக்கல் சூழலுக்குப் பின் இந்த அவலம் மேலும் அதிகரித்தே வருகிறது.அப்படி குடிபெயறும் மக்களுக்கு அவர்கள் போகும் இடங்களில் வந்தேறிகள் என்ற அவப்பெயர் கிட்டுகிறது. அப்படி ஒரு வந்தேறியாய் நானும் சில வருடங்களுக்கு முன் என் சொந்த ஊரை விட்டு வெளி மாநிலம் சென்று எனக்குத் தெரிந்த விசைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்தேன். அந்த நேரத்தில் நான் சந்தித்த அனுபவங்களே இந்த நாவல். இதில், வருகின்ற சூழ்நிலைகள் உண்மை. ஆனால், கதாபாத்திரங்கள் கற்பனையே.