ஜனார்த்தனன் பிள்ளை 1940இல் தொடர்ந்து முப்பதாண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களைத் தூக்கிலிட்டவர். முதலில் திருவிதாங்கூர் மன்னராட்சியிலும், பிறகு சுதந்திர இந்தியாவிலும் தூக்கிலிடும் வேலை செய்தவர். ஜனார்த்தனன் பிள்ளை மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவரிடம் பேசிப் பேசி அவரை குறிப்புகள் எழுதச் செய்து அவரது கதையை இப்படியொரு நூலாக ஆங்கிலத்தில் வடித்தவர் சசி வாரியர்.