தமிழின் முதலும், முதன்மையானதுமான இலக்கண நூல் தொல்காப்பியம் மொழிக்கான நெறிமுறைகள் கூறும் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும்
உலகின் எல்லா மொழிகளிலும் உண்டு. ஆனால் தமிழில் எழுத்திற்க்கும் சொல்லிற்க்கும் மட்டுமல்லாமல், தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகள் மற்றும்
சமூகத்திற்குமான பொருளிலக்கணம் கூறுவது, “ தொல்காப்பியம் “ மட்டுமே இதன் அடிப்படையில் உலகிலேயே முதன்மையான, முழுமையான இலக்கண
நூலாகத் திகழ்கிற்து.
மனிதனின் வாழ்வை அகமும் புறமுமாகப் பாகுபடுத்தி , வாழ்வு நிகழும் இடமும், பொழுதும் முதல் பொருள் என்ற வரையறை சிறப்பிலும் சிறப்பு இடமும்
காலமும் சார்ந்த உயிரிகள் மற்றும் உற்பத்திக் கூறுகள் யாவும் கருப்பொருள் எனவும் அவற்றோடு திகழும் அகவாழ்வு நிகழ்வுகள் யாவும் உரிப்பொருள்
எனவும் பாகுபடுத்தப்பட்டுள்ளது “ தொல்காப்பியத்தின்” சிறப்பாகும். இப்பாகுபாடு உலகில் எங்கும் பொருந்தக் கூடியனவாகும்.