அத்தியாயம் நாற்பத்தொன்று
உலகெலாம் உணர்ந்த ஓதற்கரியவன் !
சேக்கிழாரின் கண்களில் நீர் ஊற்றெடுக்கிறது. அடுத்தகணம், ஆகாயத்திலிருந்து ஒரு மாயக் குரல் ஒலிக்கிறது:
” உலகெலாம்........”
சேக்கிழாரின் முகம் ஒலி வீசுகிறது. அவரது திருவுடல் புல்லரிக்கிறது. தூய அதரங்கள் நெளிகின்றன. அவர் கணீரென்ற குரலில் பாடுகிறார்:
”உலகெலாம் உணர்ந்து ஓதற் கரியவன்
நிலவு லாகிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்!”