தீரன் திப்பு சுல்தான்
நம் நாட்டு வரலாற்றாசிரியர்கள் பலரும் ஆராய்ச்சியாளரும், சரித்திர நவீன்ங்களை எழுதும் ஆசிரியர்கள் கூட இந்நாட்டு வரலாற்று மேதைகள் வெகுவாக ஆராய்ந்து எழுதியவற்றை, அளித்துள்ள குறிப்புகளை அலட்சியப்படுத்தி விட்டு அன்னிய நாட்டிலிருந்து இந்நாட்டின் வரலாற்றுத் தகவல்களை தங்கள் இஷ்டம் போல எழுதி ‘ வரலாற்றையே சோடிக்கும் ‘ விபரீத மேதைகளை நம்பி அவையே உண்மை என்பதாகக் கொண்டு, அவற்றை அடிப்படையாகக் கொண்டு தம் நூல்களை எழுதுவதே இந்த உண்மைப் பஞ்சத்துக்குக் காரணம்.
ஆனால் இதை முன்னிட்டு நான் இந்த நாட்டுக்கு-ஆம் மைசூருக்கு மட்டும் இல்லை- இந்தியாவுக்கு அக்கால இந்தியாவின் இதர மன்னர்களையும் எல்லாத் தலைவர்களையும் விட உறுதியாகவும், உண்மையாகவும் ‘அன்னியனை விரட்டுவோம் அணி திரண்டு வாரீர்!’ என்று ஆவேச முழக்கம் செய்தது மட்டுமின்றி செயலிலும் இறங்கி மைசூரை இந்திய நாட்டின் முதல் சுதந்திரப் போரில் ஈடுபடச் செய்து அரிய சாதனைகளை புரிந்து மகத்தான உயிர்த் தியாகம் புரிந்து அவனை நாம் போற்றிப் புகழாமலோ, வணங்கி வழிபடாமலோ இருந்தோமானால் அது நமக்கே நாம் செய்து கொள்ளும் துரோகம் ஆகும் என்பதே என் கருத்து.