தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை
தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களோடு பல நாட்கள் பல மணி நேரங்கள் ஓவியம், சிற்பம், திரைப்படம், போன்ற கலைகள் குறித்தும், அதன் விற்பன்னர்கள் குறித்தும், இலக்கியம், இலக்கியக் கர்த்தாக்கள் குரறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் விவாதிக்கின்ற வரலாற்று வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். அவருடைய அறிதல்களும், புரிதல்களும், செயல்பாடுகளும், பன்முக ஆளுமையும் என்னை வியக்க வைத்தன. அந்தப் போர்ச் சூழலிலும் போர்களத்தில் நின்று கொண்டே இடைவிடாத அவருடைய வாசிப்பும், உலகத்தை உற்று நோக்குகின்ற பாங்கும், தமிழீழ தேசத்தை ஒரு மாதிரி நாடாக்க் கட்டமைப்பதில் அவர் கொண்டிருந்த உறுதியான முனைப்பும் மிக முக்கியமானவை மட்டுமல்ல வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
புரட்சியாளர்கள் பலரிடம் இல்லாத பன்முகத் தன்மையும் ,ஆளுமையும் தன்னகத்தே கொண்டிருப்பவர். பல நிலைகளில் தனித்துவமிக்கவராகவும், தொலைநோக்கு சிந்தனையுடனும் பார்வையுடனும் விளங்குபவர்.
நான் உள்வாங்கியவைகளையும், அறிந்தவைகளையும் இந்நூலில் தர முயற்சித்திருக்கிறேன்.
இந்நூல் அந்த மகத்தான மனிதனின் பன்முகத் தன்மையை ஓரளவிற்குப் புரிந்துகொள்ள நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன்.