அடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது. அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் சகமனிதனின் மீட்புக்காக அநேக நேரங்களில் களப்பணியாற்றிக் கொண்டிர்ருக்கும் பாமரன் அவ்வப்போது எழுதுகிறார். சாமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்துகள் உள்ளன.
சமூதாயத்தின் மீது அக்கறையுள்ள யாவரும் இந்த புத்தகத்திலுள்ள கட்டுரைகளோடு ஒன்றுபடலாம் அல்லது முரண்படலாம். முரண்பட்டாலும் அது நட்பு முரணாகத்தான் இருக்கும்.