கோவை மாவட்டத்தில் காசிகவுண்டன்புதூர் எனும் எளிய கிராமத்தில் பிறந்து, சென்னையில் 7 ஆண்டுகள் ஓவியம் பயின்று, 40 ஆண்டுகள் திரைப்படங்களிலும், நாடக மேடையிலும், சின்னத்திரையிலும் நடித்த பின்னர், எழுத்தாளராக, பேச்சாளராக இன்று தமிழ் மக்களால் அறியப்படுபவர் திரு.சிவகுமார். இளம் பிராயம் தொட்டு இன்றுவரை அவரோடு நெருங்கிப் பழகியவர்கள் சிவகுமாரோடு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார்கள்.