சமயங்கள் ஆய்வில் அடிப்படையான இரண்டு அணுகுமுறைகள் உள்ளன. ஒன்று அனுபூதி தன்மையைச் சார்ந்தது மற்றொன்று இறைவாக்கு
தன்மையைச் சார்ந்தது. டாக்டர் ஆ.அலங்காரம் இறைவாக்குத் தன்மையைச் சார்ந்த அணுகுமுறையைத் தொடர்ந்து பின்பற்றுவதோடு, சமயங்களின்
விடுதலை சாத்தியக் கூறுகளை குறிப்பாக இந்து மற்றும் கிறிஸ்துவ சமயங்களில் இருப்பதை ஆய்வு செய்கிறார். இவரைப் பொறுத்தவரையில்
விவேகானந்தரின் உலகளாவிய தர்மம் பற்றிய கனவானது இந்து சமயத்தை மறுவிளக்கம் செய்வதற்கான ஆதாரமாக இருக்கிறது. மேலும் இவர்
புதிதாக கிறிஸ்தவ சமயத்தை புரிந்துகொள்ள இயேசுவின் இறையாட்சிக் கனவைத் தொடர்ந்து மேற்கோள் காட்டுகிறார்.இந்தப் புத்தகம் தனிமனித சமுக
மற்றும் ஒருங்கினைந்த மனித விடுதலையை மையமாகக் கொண்டது.