சப்பெ கொகாலு
...இருட்டு பொங்கி வடிந்துகொண்டிருந்தது. பெசாது கூரைக்குள் போன மூப்பன் முன்னோர்களை வணங்கி, விம்மி வெடித்தான். தூங்கிக் கிடந்த மகளை எழுப்பினான். அவள் கைகளில் இறுகப் பற்றியிருந்த, கொகாலைப் பிடுங்கி, கூரையில் செருகிவிட்டு ஏரிக்கரைக்கு அழைத்துப் போனான். எல்லா சடங்குகளும் முடிந்தது. ஊராரின் குலவை காற்றைக் கிழித்தது... நடப்பது என்னவென்று அறிவதற்கு முன்னால்... சப்பெ. ஏரிக்காக ‘திட்டமிட்டபடி’ பலி கொடுக்கப்பட்டாள்..