கவிஞர் விக்ரமாதித்யன் - சொதி மணக்கும் நெல்லைப் பூமியில் தவழ்ந்த இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் நம்பிராஜன். எழுத்துலகில் பயணித்தபோது,
‘ விக்ரமாதித்யன்’ ஆனார். கவிஞர், எழுத்தாளார், பத்திரிகையாளார், விமர்சகர், நடிகர் என பல அவதாரங்களைக் கொண்ட இவரை
‘ ஒர் அவதார புருஷர்’ என்றும் சொல்லலாம். இவரது படைப்புகளுக்கான அங்கீகாரமாக - 2008-ஆம் ஆண்டு, இலக்கியத்துக்கான ’ விளக்கு’
விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 2013- ஆம் ஆண்டுக்கான ‘ சாரல்’ விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.
அவரது இலக்கியப் படைப்புகள் அனைத்தும் அமரத்துவம் பெற்றவை என்பதற்கு இதைவிட வேறுசான்று தேவையில்லை.
கவிஞர் விக்ரமாதித்யனின் இலக்கியப் பயணம் இடைவிடாமல் தொடர நக்கீரன் வாழ்த்துகிறது