பதினாறாம் காம்பவுண்ட் :
ஆண்டொவின் 16 ஆம் காம்பவுண்டில் கதை சொல்லும் உத்தி வாசகனின் ஆர்வத்தை தூண்டுகிறது, காலம் குறிப்பிடும் போது வாசக மனது ஒரு அவசரமான மர்மத்தைப் பின்தொடரும் ஆவலைப் பெறுகிறது.
இப்படியே தான் வாழ்க்கை இருக்கும் என்று எல்லோரும் நினைத்திருக்க வாழ்க்கை வேறொன்றை தன் கையிருப்பாக வைத்திருக்கிறது.
பரதவர், நாடார், இசுலாமியர் ஊடாட்டங்கள் 16 ஆம் நூற்றாண்டினைத் தொட்டுத் திரும்புகிற லாவகம், ஊடும் பாவுமாய் தூத்துக்குடி நகரத்திலுள்ள பனிமயமாதர்க்கோவில் வரலாறு, திருவிழா என்ற நிகழ்காலத்தின் வழியாக கடந்த காலத்தைப் கண்முன் கொண்டுவந்து நிறுத்திகிறார் ஆண்டோ.