மூன்றே மாதங்களில் முதல் பதிப்பு விற்பனையாகி சாதனை படைத்திருக்கும் நூல்.
இந்தியாவின் எல்லைகளிலிருந்து போர் அதன் இதயத்திலுள்ள காடுகளுக்குப் பரவிவிட்டது. இந்தியாவின் சிறப்புமிக்க எழுத்தாளர் அருந்ததிராயால்
அபாரமான பகுப்பாய்வையும் படைப்பூக்கம்கொண்ட செய்திப் பதிவையும் இணைத்து எழுதப்பட்டது ’ நொறுங்கிய குடியரசு’. உலக வல்லரசாக
எழுச்சிப்பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றின் அசலான தன்மையை இந்நூல் ஆராய்கிறது. நவீன நாகரிகம்
பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்புகிறது.