’ மந்த்லி ரெவியூ ‘ அமெரிக்காவிலிருந்து கடந்த 60 ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் ஒரு புகழ்பெற்ற இடதுசாரி திங்களிதழ், மார்க்ஸ்
ஆசிரியராகப் பணியாற்றிய ரெய்னிச் ஜெய்டுங், லெனின் பதிப்பித்த இஸ்க்ரா, புகாரின் ஆசிரியராய் இருந்து வெளிவந்த பிராவ்தா, இங்கிலாந்தில்
இருந்து வெளிவரும் நியூ லெஃப்ட் ரெவ்யூ, ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அக்காஹட்டா போல சர்வதேச இடதுசாரி இயக்க வரலாற்றில்
தவிர்க்கவியலாத பெயர் ‘மந்த்லி ரெவ்யூ ‘. இதில் 1949 - 1998 ஆண்டுகளில் வெளிவந்த முக்கியமானக் கட்டுரைகளைத் தொகுத்து “ ஹிஸ்டரி
ஆஸ் இட் ஹேப்பன்ட் “ ( History As It HAppened ) என்ற பெயரில் மந்த்லி ரெவியூ பதிப்பகமே 1949ஆம் ஆண்டு வெளியிட்டது. ஐன்ஸ்டீன்.சே குவேரா.
பால்.எம்.ஸ்வீஸி, பால் பரான், லியூ ஹீபர்மன் போன்ற ஆளுமைகள் எழுதிய கட்டுரைகள் கொண்ட தொகுப்பு: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள்
நடந்தபோதே எழுதப்பட்டு இன்றைக்கும் இடதுசாரிகள் அனைவரும் வாசிக்கும் அவசியம் உள்ள தொகுப்பு இப்போது நல்ல தமிழில்
உங்கள் கையில்....