’நெட்’சத்திரங்கள் :
இணையம் மூலம் உருவான ‘நெட்’சத்திரங்களின் வெற்றிக்கதைகளை அடையாளம் காட்டுகிறது இந்தப்ப் புத்தகம். இவர்களில் பலர், இணையம் மூலம் புகழ் பெற்றதோடு தங்களுக்கான புதிய பாதையையும் அமைத்துக் கொண்டவர்கள்.
சாமானியர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதற்கான பரந்து விரிந்த மேடையாக இணையம் இருப்பதை உணர்த்தும் இந்த ‘நெட்’சத்திரங்களின் கதை சுவாரஸ்யமானது மட்டும் அல்ல, ஊக்கம் அளிக்கக்கூடியது. இணையம் ஒன்றே போதும் என்ற நம்பிக்கையையும் தரவல்லது.
எதிர்பாராமல் புகழ் பெற்றவர்கள், சர்ச்சையின் நாயகர்களாக இருந்தவர்கள், முற்றிலும் புதுமையாக யோசித்து வெற்றிபெற்றவர்கள், இணைய ஆற்றலை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு சாதித்தவர்கள் என பல முகங்களைக் கொண்ட இந்தச் சாதனையாளர்கள், இணையப் புகழை ஜனநாயகமயமாக்கி இருப்பதையும் அழுத்தம் திருத்தமாக உணர்த்துகின்றனர்.