தமிழகப் போராட்ட வரலாறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த தெற்கெல்லைப் போராட்டத்தின் தளகர்த்தர் மார்ஷல் நேசமணியின் முழுமையான
ஆளுமையை வெளிக்கொணரும் நோக்கில் இந்நூல் ஆக்கம் பெற்றுள்ளது. பெண்ணடிமைக்கும் சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராகத் தொடங்கிய
அவரின் சமூகப்பணி குமரி மாவட்டம் உருவாவதற்கான உணர்வுப்போராட்டத்தில் செறிவடைந்தது வரையிலான அனைத்துத் தகவல்களும் இதில்
இடம்பெற்றுள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்குட்பட்டிருந்த தமிழக எல்லைக்கான நெடிய போராட்டத்தின் உணர்வுமிக்க நிகழ்வுகளில்
முக்கியப் போராளியாகத் திகழ்ந்த நேசமணியின் வாழ்க்கைப் பதிவு நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ளது இந்நூலில்.