நீண்ட சுவர்களின் வெளியே
அடிப்படைவாதம் நம் காலத்தில் வாழ்க்கை முறையாக மாறிவருகிறது. அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மனித உரிமைகளுக்காக, ஜனநாயக உரிமைகளுக்காக, பெண் உரிமைகளுக்காக, சமூக நீதிக்கான போராட்டமாக இன்று வெளிப்படுகிறது. மத அடிப்படைவாத இயக்கங்கள் ஒரு புறம் அரசியல் அதிகாரத்தை நோக்கி முன்னேறுகின்றன, இன்னொரு புறம் தமது பண்பாட்டு அதிகாரத்தை கெட்டிப்படித்துகின்றன இதற்கு எந்த ஒரு மதமும் விலக்கமல்ல இஸ்ஸாமிய, கிறித்துவ , பெளத்த, இந்துத்துவா அடிப்படைவாத அரசுகளும் அமைப்புகளும் பண்பாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் பெறும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றன இவற்றிற்கு எதிராகப் போராடும் அமைப்புகளும் சிந்தனையாளர்களும் கடும் ஒடுக்குமுறைகளை உலகெங்கும் சந்திப்பதைப் பார்க்க முடிகிறது. அடிப்படைவாதத்திற்கு எதிரான இந்த எதிர்குரல்கள்தான் நமது காலத்தின் ஓரே நம்பிக்கையாக இருக்கின்றன.
இஸ்ஸாமிய அடிப்படைவாதத்தின் மீது ஆழமான கேள்விகளை எழுப்பும் எச். பீர்முஹம்மதின் குரல் தனித்துவமானது. ஜனநாயகத்தின்பாற்பட்டது. உலகளாவிய நவீன, பின் நவீனத்துவ சிந்தனை மரபுகளின் செற்வு கொண்டது அந்த வகையில் இந்த நூல் நம்மை பல புதிய உரையாடல்களுக்கு இட்டிச் செல்கிறது.