நாட்டுக் கணக்கு இவ்வளவுதாங்க எக்னமாகிஸ் :
மாதச் சம்பளம், இயன்ற அளவு சேமிப்பு, கடனில் ஒரு வீடு, பற்றாக்குறை, கைமாற்று, அரசு தரும் சலுகைகள், ஆண்டு இருதியில் கட்டும் வருமான வரி என்ற அளவில் மட்டுமே, பொருளாதாரம் குறித்து தெரிந்து வைத்திருப்பவரா நீங்கள்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு இருக்கிற பாரத தேசத்தின் குடிமகனான உங்களுக்கு, இந்த நாட்டின் மீது அதன் வளங்களின் மீதும் மற்றவர்களுக்கு இருக்கிற அதே அளவு உரிமை இருக்கிற உங்களுக்கு, நாட்டின் வரவு செலவு என்ன என்று தெரியுமா?
நீங்கள் கட்டுகிற வரி உங்களுக்கு கிடைக்கிற சலுகைகள் போன்றவற்றை யார், எவற்றைக் கருத்தில் கொண்டு முடிவு செய்கிறார்கள் என்ற விபரங்கள் தெரியுமா?
நாட்டின் பொதுச் செலவுகளுக்காக யார் எவ்வளவு கொடுக்கிறோம். நாட்டின் பொதுப்பணத்தில் இருந்து எவர் எந்த அளவு பெறுகிறோம்? இவையெல்லாம் யாரால் எங்கே எப்படி? முடிவு செய்யப்படுகின்றன? தற்சமயம் ஆட்சியில் இருப்பவற்களால் எடுக்கப்படும் முடிவுகளின் தாக்க என்ன? அவற்றில் எவை எல்லாம் வருங்காலத்தில் நம்மையயும் நம் சந்த்தியினரையும் எப்படி, எந்த அளவு பாதிக்கும்?
இதுவரை பொருளாதார வல்லுனர்களுக்கு மட்டுமே உரிய விவாதப் பொருள் என்றிருந்த நாட்டின் நிதி சார்ந்த விபரங்களை சாதாரண மனிதர்களும் புரிந்துக்கொள்ளும் விதம் எளிமையாக எழுதியிருக்கிறார், சோம வள்ளியப்பன்.
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் படித்துத் தெரிந்துக்கொள்ள வேண்டிய பொருளாதாரம் தொடர்பான அத்தனை முக்கிய விபரங்களையும் இவ்வளவு எளிமையாகக் கூட சொல்லமுடியுமா என்ற வியப்பை ஏற்படுத்துகிற பத்தகம்.