உறைகள்
விழித்திரிருக்கும் வாளை
உருவி எடுக்க
கணநேரமாகாது எனக்கு
உன்னோடு முடிந்து முடிந்துவிடக்கூடாது
என் பெருங்கோபம்
அனலில் வறுத்தெடுத்து
பொறுக்கிப் பொறுக்கிச்
சேர்க்கிறேன்
சூடுபரத்தும் சொற்களை
இனிவருமென் தலைமுறையின்
நாவுகளில்
நாடி நரம்புகளில்
விடுதலையின் தீ
பற்றி எரியவென்று.