முந்திரிக்காட்டு நட்சத்திரம்
கிராமம் அழிந்துவிட்டது என்ற போலி பாவனை உருவாகிக் கொண்டிருக்கும் தருணத்தில், உள்ளடக்கம் மாறாத மனிதர்களை உயிர்ப்புள்ள சொற்சித்திரங்களாய் மாற்ற முயல்கிறார் முத்துவேல்.
மனிதர்களை அவர்தம் அசலான குணங்கலோடும், சூழ்நிலைகளோடும் உருவாக்கிவிடுகிறபோதே ஒரு படைப்பு முழுமை பெற்றுவிடுகிறது. தேர்ந்தவொரு படைப்பாள், தான் கண்டடைந்ததைச் சுட்டிக்காட்டி விட்டுத் தள்ளி நின்றுகொள்கிறபோதே, வாசிப்பவர் தனக்கான சுதந்திரத்தோடு தேடலைத் தொடங்குகிறார். இத்தொகுப்பில் முத்துவேல் அந்நிலையை அடைந்திருக்கிறார்.
--- அழகிய பெரியவன்