மொழித்திறம்
<p>செறிவு மிகுந்த இலக்கணக்கூறுகளை இனிமையும் எளிமையும் ததும்ப எடுத்துரைக்கும் தொகைநூல் இது. ஒவ்வொரு சொல்லுக்கும் அடியில் எத்தகைய ஆணிவேர்த்தன்மை உள்ளது என்பதை இந்நூல் விளக்குகிறது. தற்காலத் தமிழ்நடையில் காணப்படுகின்ற எண்ணற்ற பிழைகளைக் களையும் வழிகளைக் கற்றுக்கொடுக்கிறது. நம் மொழியின் உண்மையான அழகையும் நுட்பத்தையும் யாவர்க்கும் புரிகின்ற வகையில் எடுத்தியம்புகிறது. நூலாசிரியரால் தமிழ் இல்க்கணக் குறிப்புகளாக இணையத்தில் எழுதப்பட்டவையும், புதியதலைமுறை வார இதழில் தமிழே நலமா என்ற தலைப்பில் எழுதப்பட்டவையும் அடங்கிய முழுதொகுப்பு இது.