·பூமிக்குள் எண்ணெய் இருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்க, கிராமங்களில் அடிக்கடி வெடிகுண்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அந்த சமயத்தில் இரண்டு தென்னை மர உயரத்துக்கு, சேறும் எண்ணெயும் வார் அடிக்கும். இதனால் பக்கத்தில் உள்ள நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும்.
·ஒரு எண்ணெய்க் கிணறு, 5 முதல் 7 ஏக்கர் விளைநிலத்தை வளைத்துப் போட்டு அமைக்கப்பட்டுள்ளது.
·10 அடி, 15 அடியில் கிடைத்து வந்த நிலத்தடி நீர்... பல அடி ஆழத்துக்குப் போய்விட்டது அத்தனை அடி ஆழத்திலிருந்து நீரை எடுத்தாலும், அது உப்பாக மாறி குடிக்கவே லாயக்கற்றதாகிவிட்டது.
·தினமும் ஒரு கிணற்றில் இருந்து 75 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். 35 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுக்கப்படுகிறது என்றால், அதுவரையிலும் தினந்தோறும் நிலத்தடி நீரை வெளியேற்றித்தான் ஆகவேண்டும். இதனால் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிப்போய், காய்ந்துபோன கருவாடாக, காவிரி டெல்டா கிராமங்கள் மாறும். நிலத்தடி நீர்தொகுப்புகள் அனைத்தும் வறண்டு போகும். கடல் நீர், காவிரிப் படுகையின் உள்ளே ஊடுருவி உலா வரும்.
·நிலக்கரி மற்றும் வண்டல் மண் பாறைகளின் இடுக்குகளில் இருந்து மீத்தேன் எடுப்பதற்கு ‘ ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங் ‘ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் ஒரு கிணற்றுக்கு ஒருமுறை ஹைட்ராலிக் ஃபிராக்ச்சரிங் செய்வதற்கான கரைசல் தயாரிக்க, 5 கோடியே 66 லட்சத்து 33 ஆயிரத்து 693 லிட்டர் தண்ணீரும், 144 டன் மணலும், 80 டன் முதல் 300 டன் வரை ரசாயனப் பொருட்களும் தேவைப்படும்.
·மீத்தேன் கிணறுகளின் கழிவுநீர்க் குட்டைகளில் இருந்து வெளியேறிய ரசாயனக் கழிவுகள் கலந்ததால், ஏராளமான நீரோடைகள் நஞ்சாகிக் கிடக்கின்றன.
No product review yet. Be the first to review this product.