மார்க்சும் எங்கெல்சும் எழுதிய நூல்களான ஜெர்மானியக் கோட்பாடு.” ரைனீசெர் பியோ பாஸ்டெ “ ரின் கம்யூனிஸம், கம்யூனிஸ்ட் கட்சியின்
அறிக்கை முதலியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகள் சமுதாய உணர்வின் உருவங்களில் ஒன்றாகவும், வர்க்க சமுதாயத்தின் மேல்தளத்து அம்சங்களில்
ஒன்றாகவும் மதத்தை வருணிக்கின்றன. சமுதாயத்தின் வர்க்கக் கட்டுகோப்பின்மீதும், சமுதாய உறவுகளின் வளர்ச்சியின்மீதும் மதம் எவ்வாறு சார்ந்து
நிற்கிறது எனபதை மார்க்சியத்தின் ஸ்தாபர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். மக்கட்பெருங் கூட்டத்தை அடக்கவும் அந்தகாரத்தில் ஆழ்த்தவும் உதவும் சாதனமாக
மதத்தைப் போஷித்து வளர்ப்பதில் சுரண்டும் வர்க்கங்களுக்குள்ள அக்கறையையும் அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.
“ மதம் என்பது மக்களுக்கு அபினி “ என்று மார்க்ஸ் 1844 - ஆம் ஆண்டிலேயே எழுதி விட்டார். மதத்தைப் பற்றிய மார்க்சியக் கண்ணோட்டம்
முழுமைக்கும் இந்த வாசகமே திருப்புமுனையாகிவிட்டது.