மறைய மறுக்கும் வரலாறு
இதுவரை தமிழ் இலக்கிய உலகில் வெளிவந்துள்ள தலித் இலக்கிய வகைகளும் அதைக் குறித்த ஆய்வுகளும் தலித் மற்றும் தலித் அல்லாதவர்களிடம் எத்தகைய தாக்கங்களையும் எதிர்வினைகளையும் உருவாக்கியிருக்கிறது என்பதைப் பதிவுசெய்யும் நோக்கோடு இத்தொகுப்பு உருவாகியுள்ளது. தலித் கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, பெண்ணியம் இவை தொடர்பான சீரிய விவாதங்களை எடுத்துச் செல்லும் விதமாக, தமிழ்நாட்டில் தலித் மக்களின் பண்பாட்டையும் இழந்த அரசியலையும் அழகியலையும் மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியில் தொடர்ந்து செயல்பூர்வமாகவும் செயலாற்றிக் கொண்டிருக்கக்கூடிய படைப்பாளர்களிடமிருந்து தொகுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு.