இந்தியாவிலும் உலவுவதாக நம்பப்படுகின்ற மோகினிப் பிசாசு, குட்டிச் சாத்தான் ஆவிகளை விரட்ட துடைப்பம், வேப்பிலை மற்றும் ரம்யா கிருஷ்ணனின் படங்கள் உதவிபுரிகின்றன.
னால் வெளிநாடுகளில் ஆவிகளையும் இதர மர்மங்களையும் விஞ்ஞான வடிவில் நம்பவைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கின்றன. எனில் மதனின் இந்தப் புத்தகம் எதைச் சொல்கிறது? ஆவிகள் இருப்பதை நம்புகிறீர்களா? ஆவிகள் நிஜமா, பொய்யா என்பதை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகச் சொல்லமுடியுமா? ஆவிகளில் உள்ள வெரைட்டிகள் (ஜாதிகள்?), அவற்றிடம் எவ்வாறு பழக வேண்டும் என்பது பற்றியெல்லாம் தெரியுமா? ஆலங்கட்டி மழையில் நனைந்திருப்பீர்கள்! தவளை மழை,மீன் மழையில் நனைந்த அனுபவம்?
பரா தட்டு தெரியும். பறக்கும் தட்டு? ஆங்கிலப் படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் வேற்றுக்கிரக மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் என்று சொன்னவர்கள் உண்டு. அவர்களின் 'விசேஷ' அனுபவங்கள் என்னென்ன தெரியுமா? ஆவிகளுக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கும்கூட வாழ்க்கை(!) வரலாறு உண்டு என்பதைப் பல சம்பவங்களோடும் கேள்விகளோடும் சுவாரசியமாகச் சொல்லிக் கொண்டு போகிறது இந்நூல். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக இது வெளிவந்தபோது பல லட்சக்கணக்கான வாசகர்களை வாரம் இருமுறை சில்லிட வைத்தது! '