எதை எழுதுவார், எப்போது எழுதுவார், எப்படி எழுதுவார் என்று அவருடைய தொடர்ச்சியான வாசகர்களாலும் , சக கவிஞர்களாலும்கூட யூகிக்க
முடியாது எனபதுதான் கவிஞர் விக்ரமாதித்யனின் தனிச்சிறப்பு. இந்தத் தொகுப்பில் கவிதை பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ஒரு கவிஞ்சனின் நிலை இந்த்த்
தமிழ் மண்ணில் எப்படி இருக்கிறது என்று கவிதை எழுதியிருக்கிறார்.பல சிக்கலான விஷயஙகள் பற்றி எளிமையாகவும் எளிமையின் சிக்கல்
பற்றி விரிவாகவும் கவிதைகள் தந்திருக்கிறார். கவிஞர் விக்ரமாதித்யனின் கவிதைகள் குழந்தையின் ஒளிவுமறைவற்ற மனதைப் போன்றவை, அது
தனக்கு தோன்றியதை வெளிப்படையாகச் சொல்கிறது. எதற்காகவும் யாருக்காகவும் அது தன்னை மறைத்துக் கொள்வதில்லை.