மாஜினி :
v உங்களுடைய இன்ப துன்பங்களில் பங்குகொள்ளச் சித்தமாக இருக்கும் உங்கள் குடும்பம், மனைவி, உற்றார், உறவினர் அனைவரிட்த்திலும் அன்பு செலுத்துங்கள்.
v மானிடச் சமுதாயத்தை நேசியுங்கள்,கொண்டுள்ள லட்சியத்தின் மீது அன்பு செலுத்துங்கள். அதனைப் போற்றுங்கள். உங்கள் மனசாட்சிக்கு மரியாதை செலுத்துங்கள்.எப்போழுதும் உண்மையே பேசுங்கள்.
v ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு காரியத்தை நிறைவேற்றுவதற்காகவே தோன்றியிருக்கிறான். அதனை நிறைவேற்றுவதிலும் அதற்கான சாதன்ங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும், அவனுக்கு எந்தவிதமான தடைகளோ, நிர்பந்தங்களோ இருக்க்கூடாது.
v உயர்ந்த லட்சியம் இல்லாத வாழ்க்கை, அந்த லட்சியத்துக்காக பாடுபடாத வாழ்க்கை, வாழ்க்கையல்ல. மனிதன் முன்னேற வேண்டும்; படிப்படியாக முன்னேற வேண்டும்; உழைப்பினால் முன்னேற வேண்டும்.
- இவை, மனிதனுக்கு மாஜினி சொல்லிவிட்டுச்
சென்றிருக்கும் வாழ்க்கை ரகசியங்கள்.
மாஜினியின் வாழ்க்கை,
மனித குலம் மேம்படுவதற்கான ஒரு பாடம்.