கதைச் சிற்பி சரத்சந்திரர்
சரத்சந்திரர், வங்காள இலக்கிய உலகின் ஆற்றல் மிகு படைப்பாளி. சமூக ஏற்புடையதற்ற காதலைச் சொல்வது, ஆண்-பெண் உறவை புதிய விதத்தில் அணுகுவது, பழமைவாதம் ஓங்கியிருந்த காலத்தில் நவீன நோக்கில் கதைச் சித்திரிப்பு என மேற்குலக இலக்கியங்களுக்கு இணையாக கலைத்தன்னை மிக்க படைப்புகளை உருவாக்கியவர் சரத்சந்திரர்.
ரவீந்திரநாத தாகூரின் படைப்புகளைப் படித்திராத ஒரு சாதாரண வங்காளிகூட சரத்சந்திரரின் எழுத்துக்களைப் படித்திருப்பார்.
சரத்சந்திரரின் ‘தேவதாஸ்’ இந்திய மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் பெருமைக்குரிய கலைஞர்களில் ஒருவரான சரத்சந்திரரைப் பற்றி சு.கிருஷ்ணமூர்த்தி சிறப்பாகப் படைத்தளித்த நூல்.