கருத்து சுதந்திரத்தின் அரசியல்
இந்த சர்வதேச ஊடகங்கள் நிகழ்த்தும் அரசியலில் மூன்றாவது உலக எழுத்தாளர்களின் பெயர்கள் தொடர்ந்து மறைக்கப் பட்டே வருகின்றன. (சிற்சில சமயங்களில் இட ஒதுக்கீடு போல சலுகைகள் காட்டுவார்கள்) எந்த ஊடகமும் மூன்றாம் உலக நாடுகளின் எழுத்துக்களையோ, பின்காலனிய அரசியல் நிலைப்பாட்டின் அழகியல்களையோ முன்வரிசையில் வைத்துப் பேசுவதில்லை. இதற்குப் பின்னால் உள்ள நுண்ணரசியல் செயல்பாடுகள்தான் கலை, அழகியல் என்கிற பெயர்களிலும் தீவிரமான, தரமான, சிறந்த எழுத்து என்கிற பெயர்களிலும் விருதுகளாக வழங்கப்படுகின்றன. மாற்றுப் பார்வைகளை, மாற்றுக் கலாசாரங்களை, மாற்று எழுத்துக்களை என்றுமே அங்கீகர்ப்பதில்லை, மாறாக, மேற்குலகினராகிய தாங்கள் உருவாக்கி வைத்திருக்கும் எழுத்துமுறைகளைப் பின்பற்றி எவரொருவர் எழுதுகிறார்களோ அவர்களே விருதுக்குத் தகுதியானவர்கள்....