கற்பனை கடிதங்கள்
ஆசைப்பட புத்தனின் எழுத்துக்கள் இவை. எல்லோரோடு எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள எளிமையான வழி வேறென்ன. ஞாபகமற்றுப்போன கடித வழியை ஞாபகப்படுத்துவதில் தொடங்கி ஒவ்வொன்றையும் ஞாபகப்படுத்தும் கடிதங்கள் இவை. மனம் பற்றிக்கொண்டவர்களையும் – வற்றையும் கனம் பற்றிக்கொள்ள கவனப்படுத்திவைக்கிறது. எழுத்துக்கள் எடையற்றவை. சர்வசாதாரணமாக ந்ழுத்தை, நம் தோள்மீது ஏற்றிவைத்துக்கொள்ளமுடிகிறது. பின்புதான் புரிகிறது அதன் கனம். வாழ்வு கனக்காமல் இருக்குமா என்ன?