ஜெயிப்பது நிஜம் :
மரங்கள் தானாக வளார்வதில்லை, அது விதைக்கப்படுகிறது. அதுபோலவே ஒவ்வொரு செயலும் தானாக நடப்பதில்லை, அது நமது செயல்பாடுகள், நமது சிந்தனைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் பலனே.
வாழ்க்கையில் – அது நமது குடும்பமாக இருந்தாலும், அலுவலகமாக இருந்தாலும் சரி, அதில் நமது வெற்றி என்பது நம்மால்தான் முடிவு செய்யப்படுகிறது.
இந்த வாழ்க்கைப் பயணத்தில், எதிலும் வெற்றியை நோக்கியதாகவே இருக்கும் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களும் முழுமை அடைவதில்லை. தோல்வியைக் கண்டால் துவண்டுவிடுவது, வெற்றியின்போது துள்ளி குதிப்பது என்று உள்ளோம்.
இந்த இரண்டையும் ஒன்றாக பார்ப்பவர்கள், நம்மை முந்திக்கொண்டு வெகுதொலைவில் சென்றுகொண்டு இருக்கிறார்கள்.
அலுவலகம், குடும்பம் இரண்டையும் தனித்தனியாக பார்த்தாலும், இரண்டுக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இந்த வாழ்க்கை பயணத்தில் வெற்றியை அடைவதற்கான மிகவும் எளிமையான சூத்திரங்களை இந்தப் புத்தகத்தில் விளாக்கியுள்ளார் நூலாசிரியர்.
இதைப் படித்து அதை நடைமுறைப்படுத்தினாலே, அனைவரும் ஜெயிப்பது நிஜம்.