இரொப்பாவில் 1930களில் நடந்த சர்வதிகார ஆக்கிரமிப்புகள் இரண்டாவது முறையாக உலக அளவிலான போர்களுக்கு இட்டுச் சென்றன1939 முதல் 1945 வரை நிகழ்ந்த போர்கள் அட்லாண்டிக் கடல் முதல் பசிபிக் கடல் வரையிலும்,ஆர்டிக் முதல் இந்தோனேசியா வரையிலும் வியாபித்திருந்தன.ஜெர்மனி,இத்தாலி,ஜப்பான் ஆகியவை ஓர் அணியிலும்,பிரிட்டன்,சோவியத் யூனியன்,அமெரிக்கா ஆகியவை மற்றோர் அணியிலும் திரண்டு தாக்குதலைத் தொடர்ந்தன.இது சர்வதிகாரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இடையே நடந்த போர் மட்டுமின்றி நாஜிகளுக்கும் கம்யூனிசத்துக்கும் இடையே நடந்த போராகும்.அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ தளபதிகளின் பேராசைகளும் மனநோய்களௌயும் வெளிப்படுத்திய போராகும் இது.சாதரண வெடிகுண்டிலிருந்து அணுகுண்டு வரை இப்போரில் பயன்படுத்தப்பட்டன.ராணுவம் மட்டுமின்றி,சிறுவர்,பெண்கள்,முதியோர்,கிளர்ச்சியாளர் ஆகியோரையும் ஈடுபடுத்திய போர் இது.இப்போரில் ஐந்து கோடி பேர் கொல்லப்பட்டனர்.இந்த மறக்க முடியாத நீண்ட நிகழ்வை இந்த நூல் எடுத்துரைக்கிறது.