கூகிள் இல்லாத ஓர் உலகம் எப்படி இருக்கும்? இதனைத் தெரிந்து கொள்ளவும் கூட நமக்கு கூகிள் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை.
இந்தப் புத்தகம் சில அத்தியாவசியமான அடிப்படைகளை அறிமுகப் படுத்துகிறது.
மிகச்சாதரணமாகப் பயன்படுத்தும்போதே இத்தனை தகவல்களை அள்ளித்தரும் கூகிளை முழுமையாகவும் திறமையாகவும் பயன்படுத்தத் தொடங்கினால் என்னவெல்லாம் கிடைக்கும்? என ஆச்சரியமூட்டும் ஓர் அறிவுப் புதையலாக இந்நூல் உள்ளது.