கிரிவலம்
திருவண்ணாமலை.... நினைத்தாலே முக்தி தரும் அற்புதத் தலம். இங்கே கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த வழிபாடு. ஏன் இங்கே கிரிவலம் செய்ய வேண்டும்? மற்ற தலங்களில் கருவறையில் உருவமாக இறைவன் இருப்பார்; இங்கே இந்த மலையே சிவன் வடிவாகக் கருதப்படுகிறது. ஆலயத்தை வலம் வருவது போல இங்கே மலையை வலம் வருவது புண்ணியம் தருகிறது.
· கிரிவலம் செல்லும் பலருக்கு அதன் வழிமுறைகளும் மகத்துவமும் புரிவதில்லை.
· கிரிவலத்தின் ஆன்மிக விளக்கம் என்ன?
· கிரிவல்த்தை எங்கே ஆரம்பிக்க வேண்டும்?
· எந்தெந்த நாட்கள் கிரிவலம் செய்ய உகந்தவை?
· கிரிவலம் வரும்போது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்?
· கிரிவலம் பாதையில் இருக்கும் அஷ்டலிங்க ஆலயங்களின் மகத்துவம் என்ன?
· தரிசிக்க வேண்டிய இதர முக்கிய ஆலயங்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் ஆசிரமங்கள்.... சகலமும் சொல்லும் பரவச ஆன்மிக வழிகாட்டி இது!