கமலா தாஸின் ‘என் கதை’ யைத் தவிர்த்து,ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடன் உண்மை அன்புக்காக அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களௌடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை.