டார்வின் ஸ்கூல்
இப்படியும் எழுத முடியுமா என வியக்க வைக்கும் இரா.நடராசன் அவர்களின் புதிய நூல், ‘டார்வின் ஸ்கூல்.’ மாந்திரீக எதார்த்த நாவல் என்பது கற்றுத் தேர்ந்த, பிராயம் வந்த பண்டிதர்களுக்கு மட்டுமே என்பதை மாற்றி சிறுவர்களுக்கான ஒரு நூலை எழுதியுள்ளார் ஆயிஷா இரா.நடராசன். விலங்குகள் படிக்கும் பள்ளியினைக் களமாகக் கொண்டு பரிணாமவியல், டார்வினின் இயற்கைத் தேர்வு கோட்பாடு என்பதையும் நம் காலத்து சுற்றுச்சூழல் பிரச்சனைகள்., கரிசனங்கள் ஆகியவற்றையும் ஒரு ஒற்றைச் சித்திரத்தின் வண்ணமயமான பரப்பிற்குள்ளேயே அதன் சட்டகத்திற்கு வெளியே செல்லாமலேயே தீட்டித் தந்துள்ளார். உயிரியலின் உச்சி முடியையும் சூழலியலையும் சிறுவர்கள் குதூகலமாக வாசித்து மகிழ்வதன் ஊடாக கற்றுக் கொள்வதற்கான நூல். சிறாருக்கு வாசிக்க வாங்கித் தரும் சாக்கில் பெரியவர்களே வாசித்து அறிவதற்கு ஆழமான உட்பொருள் கொண்ட நூல்.