பாலச்சந்திரனின் இறுதியுணவு
சந்தர்ப்பவாத போலி அரசியல் இயக்கங்களை அடையாளம் காட்டுவது, ஆண்-பெண் உறவில் ஆண்மை எனும் பதத்தின் ஆதிக்கக் கருத்தியலை தகர்த்துக்கொள்வது போன்றவற்றுடன் மேலதிகமாக பகடிகளையும் தனது கவிதைகளில் சுகுணா திவாகர் மேற்கொள்கிறார். இவரின் கவிதைகள் சொல்லும் மொழியில் உரையாடலின் நெருக்கம்- அடக்கிவாசிக்கப் பட்டிருக்கும் தன்னிலையோடு- நவீனப் புலன் உணர்வுகளில் வர்க்க நீக்கம் செய்யும் செயல்பாடுகளையும், அதனால் ஏற்படும் அரசியல் சார்ந்த மெய்யியல் இன்பத்தையும் நமக்குத் தருகின்றன. தனி மனிதனின் தனி உணர்ச்சிக்கும் அதன் சுதந்திரத் தேர்விக்கும் மதங்கள், இயக்கங்கள், சாதிகள், அரசு நலன்கள் ஒருபோதும் துணையாய் இருப்பதில்லை என்பதைப் புரிந்து கொண்ட பெரியாரியலின் நீட்சியாக இந்தத் தொகுப்பைப் பார்க்கலாம்.