மேற்குத் தொடர்ச்சி மலையை இயற்கை ஆட்சிபுரிகின்றது. இந்த மலைதான் சித்தர்களின் இருப்பிடம்; இந்தப் பூமியை ஜீவிக்கச் செய்யும் அவர்களது
அருளின் பிறப்பிடம். சதுரகிரி துவங்கி, குற்றாலம், பொதிகை, மகேந்திரகிரி, எனத் தொடரும் சித்தர்களின் சிலிர்ப்பூட்டும் வாசஸ்தலங்களில்
பிரதானமானது அத்ரிமலை. சித்தர்கள் நடமாடிய , அவர்கள் தவமியற்றிய புண்ணிய பூமியில் பாதம் பதிப்பது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய
பெரும்பாக்கியம்.
ஆதி ரிஷியான அத்ரி மகரிஷியும், சித்தர்களில் முதன்மையானவரான அகத்திய மாமுனிவரும் வாசம்புரிந்த அத்ரிமலைக்கு யாத்திரை செல்வது
வாழ்வையே மாற்றியமைக்கும். அந்தப் பயணத்தை எப்படிச் செய்வது? தரிசிக்க சகலமும் விவரிக்கும் அற்புத நூல் இது !